இயற்கை மருத்துவ குணநலன்களை வெளிப்படுத்தும் சித்திரை புத்தாண்டு



எமது பாரம்பரியங்களோடு தொடர்புபட்ட சித்திரை புத்தாண்டானது இயற்கையான ரீதியில் எமக்கு நன்மைகள் பல தரக்கூடியதாகவும் காணப்படுகின்றது.இன்றைய காலக்கட்டத்தில் எமது நாளாந்த வாழ்க்கையில் இயற்கையின் பயன்பாடு குறைவடைந்தே வருகின்றது.ஆனால் ;சித்திரை புத்தாண்டானது பற்பல இயற்கையோடினைந்த மருத்துவ குணநலன்களை வெளிப்படுத்துகின்றது. இக்குணநலன்கள் பெரியவர்களுக்கு மட்டுமல்லாது சிறுவர்களுக்குமு; அதிக நன்மையினை கொடுக்கின்றது.


1. மருத்து நீர் என்றால் சுத்தமான நீரில், தாழம்பூ தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியால் செங்கழு நீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை இட்டு நன்கு காய்ச்சி எடுத்துக்கொள்வதே மருத்துநீராகும்.இம்மருத்து நீரினை வீட்டில் செய்துக்கொள்ள முடியாதவர்கள் கோயில்களில் பெற்றுக்கொள்ளலாம்.சமய முறைப்படி இம்மருத்து நிரானது தோஷங்களை நீங்குவது என்று கருதப்பட்டாலும் மருத்துவ முறைப்படி உடலுக்கு குளிர்ச்சியையும் நோய்தடுப்பு சக்தியையும் தரக்கூடியதாக காணப்படுகின்றது.

2.
சித்திரை புத்தாண்டன்று வாசலில் தோரணமாக மாவிலை கட்டுவது வழமையாகும்;.மா இலை சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.மேலும் கிருமிகளை அழிக்கும் சக்தியும் மாவிலைக்கு உ;ணடு.

3. சித்திரை புத்தண்டன்று பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பதோடு
வீட்டிற்கும் மஞ்சள் நீரினை தெளிப்பர்.மஞ்சள் , தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் கொண்டது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும்  மஞ்சள் பயன்படுகிறது. மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசினால்;, முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை தடுக்கப்படும்.


4சித்திரை புத்தாண்டின் மற்றொரு சிறப்பம்சம் அழகிய வண்ணமயமான கோலங்களை வாசலில் இடுதலாகும்.கோலமிடுதலின் நன்மைகள் எவை என நோக்கும் போது கோலமிடுவதற்கு முன் வாசலினை நன்றாக கழுவி பசு சாணத்தால் மெழுகுவர். அச்சானத்தால் ஓசோன் வாயுப் படலம் சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன் வாசலில் தெளிக்கப்படுவதால் முழுமையான மற்றும் சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. மேலும் குணிந்து பெருக்குதல், குணிந்து கோலமிடுதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாகும். இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் கோலமாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியது. பசு சாணத்தாலோ, தண்ணீராலோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. மேலும் கோலமிடுவதால் அதனை ஈ மற்றும் எறும்புகள் உண்கின்றன.ஆகவே புத்தாண்டன்று உயிர்களுக்கு உணவளித்த திருப்பதியும் ஏற்படும்.

.

5. சித்திரை புதவருடத்தன்று செய்யப்படும் தின்பண்டங்களில் தானிய
வகைகள் அதிகமாக காணப்படுவதால் அவை உடலுக்கு நன்மைபயப்பதாக காணப்படுகின்றது.மேலும் இன்றைய அவசர உலகில் ;உணவில் இஞ்சியின் பாவனை குறைந்துவிட்டது பண்டிகைக்கால திண்பண்டங்களில் அதிகமாக இஞ்சி சேர்க்கப்படும் இவ்விஞ்சியின் மூலம் வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டு சுறு சுறுப்பு ஏற்படும்.மேலும் திண்பண்டங்களில் அதிகமாக காணப்படும் மற்றொரு உணவு வகை நெய்.நெய்யின் மூலம் மலச்சிக்கல், களைப்பு, பித்த தலைச்சுற்று ,மார்பு வலி என்பனவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும்.

6. பண்டிகைகள் என்றாலே நிச்சயம் பூஜைக்குமாகட்டும் , உணவிற்காகட்டு வாழைப்பழத்திற்கு தனியிடம் உண்டு.வாழைப்பழத்தில் உள்ள விட்டமினகள் சி ஈறுகளையும் தசை நார்ளையும் உறுதியுடன் இருக்கச்
செய்கின்றது.நோயெதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு வழங்குகின்றது.மெக்னீசியம் பொட்டாசியம் பொஸ்பரஸ் ஆகிய உப்புக்கள் வாழைப்பழத்தில் அதிகமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தடையின்றி சீராக இயங்க வாய்பளிக்கின்றது.இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்துகின்றது.அலர்ஜியால் அவஸ்தைப் படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் தீங்கற்ற அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப் பதால், இது அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கின்றது.

7. சித்திரை புத்தாண்டின் உணவு பறிமாற்றத்தில் வாழை இலையும் முக்கிய பங்கு வகிக்கின்றது.வாழை இலையில் உணவு உட்கொண்டால் சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் இந்நஞ்சினை ஓரளவு
முறிக்கும் தன்மைக்கொண்டது வாழையிலை. வாழை இலையில் உணவு உட்கொண்டால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும்.பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டுவதோடு வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

8. சித்திரை புத்தாண்டின் மற்றொரு நன்மை எல்லோரும் ஒன்றாக இணைந்து உணவு வேளைகளில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது.அதன் மூலமான நன்மை யாதெனின் சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்துஅமர்வதனால்
ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது உடலின் ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

9. புத்தாண்டன்று நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் மக்கள் பங்குகொள்வதால் உடலில் இரத்தோட்டம் அதிகமாகி உடலை வேகமாக செயற்பட வைக்கின்றது.மேலும் உடலுக்கு புத்துணர்வையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதால் உடல் ஆரோக்கியமாகுவதற்கு வழிவகுக்கின்றது.

- ஸ்ரீயா




கருத்துகள்