நவீன சமூகத்தின் அபிவிருத்தியில் பெரும் பங்களிப்பு வழங்கும் உயர் கல்வி !.........


நவீன சமூகத்தின் அபிவிருத்தியில் பெரும் பங்களிப்பு வழங்கும் உயர் கல்வி !.........



கல்வியானது எமது வாழ்க்கையின் மிக முக்கிய பங்காகும்.அதிலும் குறிப்பாக உயர் கல்வியானது இன்றைய காலங்களில் வேகமாக வளர்ந்து வரும் தேவையாகவுள்ளது. உயர் கல்வி எனும் வார்த்தைக்கான வரையறையானது பாடசாலை கல்வியின் பின் இளையோரை  தொழிற்றுறைக்கு தயார்படுத்தும் நோக்கில் கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் மேலதிகமாக வழங்கும் கல்வியே உயர் ;கல்வி எனப்படும்.இன்று இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியில் இளையோரின் அறிவு மேம்பாட்டிற்கு எண்ணிலடங்கா கல்லூரிகளும் கல்வி நிறுவனங்களும் காணப்படுகின்றன.

சுய அபிவிருத்திääதொழில்வாய்ப்பு உத்தரவாதம்  சமூக அபிவிருத்தி என்பன உயர் கல்வி மூலம் நாம் பெற்றுக்கொள்ளும் வெகுமதிகளாகும்.இவையே வாழ்க்கையின் தேவைப்பாடுகளாக காணப்படுகின்றன.எனவே வாழ்க்கையின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு உயர் கல்வி மிக அத்தியாவசியமாகும்.கல்வி தொடர்பான ஒரு உறுதியான முடிவினை உங்களால் எடுத்துக்கொள்ள முடியாவிட்டால் நீங்கள் வாழ்க்கையில் தோல்வியினை சந்திப்பவர்களாகவே காணப்படுவீர்கள்.

சமூகத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கென்ற சுய முன்னேற்றத்தை பெற முயற்சிக்கும்போது சமூகமானது முன்னேற்றமடையும் அதிலும் குறிப்பாக நவீன சமூகத்தின் வளர்ச்சியில் உயர் கல்வியானது அதிக பங்கு வகிக்கின்றது. ' உயர் கல்வி  நவீன சமூகத்தின் அமைப்புக்கு மிக முக்கியமான உறுப்பு” என  De Alfonso Borrero    எனும் கல்வியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் “இன்றைய பல்கலைக்கழகமே நாளைய நிறுவனம்” எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

தொழில்மயமான அபிவிருத்தியை நோக்கி வேகமாக நகரும் இவ் நவீன உலகமானது உயர் கல்வியை ஆதாரமாக கொண்டே செயற்படுகின்றது.சமூக பொருளாதார அபிவிருத்தியானது அதிகரித்து வருவதற்கு தொழில் முறை மற்றும் நிர்வாக முறையின் அபிவிருத்தி தேவைப்பாடு காணப்படுகின்றது.இவ்வபிவிருத்தியினை உயர் கல்வியினாலேயே மேற்கொள்ள முடியும்.கல்வி கற்றோர் அதிகரிக்கப்படுகையில் அச்சமூகமானது கல்வி கற்றோரை உள்ளடக்கிய சமூகமாக உருமாறுகின்றது.அத்தகைய உருமாற்றமானது தொழில் முறை ரீதியில் பல நிறுவனங்களின் தோற்றத்திற்கும் பொருளாதார அபிவிருத்திற்கும் வழிவகுக்கும் போது நவீன சமூகமானது உயர்வு நிலையை எய்துகின்றது.பொருளாதார மறுமளர்ச்சி ஏற்பட்டதின் பின் பல நாடுகள் இவ் பொருளாதாரத்தின் பிண்ணனியில் வளர்ச்சியடையும் நவீன சமூகத்தின் உருவாக்கத்திற்கு வித்திட்டன.அவ் அபிவிருத்தியினை அவர்கள் உயர் கல்வியினை கொண்டே மேம்படுத்தின.1990ஆம் ஆண்டின் பின் 18.4 மில்லியனாக உயர் கல்வி வளர்ச்சியடைந்திருப்பதானது இதற்கு சான்றாகும்.

தற்போதைய நிலையின் படி ஒரு நாட்டினதும் சமூகத்தினதும் வளர்ச்சியானது உயர் கல்வியிலேயே தங்கியுள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.சனத்தொகை அதிகரிப்பும் வாழ்வியல் ரீதியான மாற்றங்களும் அதிகளவான வைத்தியர்கள்,நிர்வாகிகள் , பொறியியலாளர்கள் அரசியல்வாதிகள் வழக்கறிஞர்கள்,ஆசிரியர்கள்,அதிபர்கள்,முகாமையாளர்கள் ,நிறுவுனர்கள்,போன்ற பல் துறைசார் வல்லுனர்களில் தங்கியுள்ளமையால் இத்தகைய உயர்வு நிலையினை ஏற்படுத்துவதற்கு உயர் கல்வி அதி முக்கியமாகும்.

மேலுமொரு முக்கிய விடயம் என்னெவென்றால் பெண்களின் முன்னேற்றமாகும்.நவீன யுகத்தில் தொழிற்துறையில் ;பெண்களின் பங்களிப்பு அதிகளவில் காணப்படுவதனை நாம் காணக்கூடியதாக உள்ளது.காலத்தின் தேவையின் பொருட்டு பெண்களும் தங்களின் ஆளுமைகளை வளர்த்துக்கொள்வதற்கும் தலைமைத்துவத்தில் பங்காற்றவும் அதிகளவாக விரும்புகின்றனர்.இன்று சர்வதேச ரீதியில்  எண்ணிலடங்கா பெண்கள் வெற்றியின் சிகரத்தை தொட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.பெண்களின் இத்தகைய உயர்வுக்கு அடித்தளமிட்ட பெருமை உயர் கல்வி துறையினையே சாரும்.சிறந்த விதத்திலான உயர் கல்வியினை கற்று பெண்களும் இன்று தனது குடம்பத்தின் பொருளாதாரத்தில் மட்டுமல்ல சமூகத்தினதும் நாட்டினதும் பொருளாதாரத்திலும் பங்களிப்பு செலுத்துகின்றமையானது நவீன சமூக அபிவிருத்தியில் உயர் கல்வியின் அத்தியாவசியத்தை நன்கு உணர்த்துகின்றது.

மேலும் சுயதொழில் மேற்கொள்வோரும் தங்களின் சுய தொழிலினை விரிவுபடுத்தும் நோக்கில் உயர் கல்வியினை மேற்கொள்வதனை நாம் சமூகத்தில் காண முடியும்.தொழில் ரீதியான நுணக்கங்களை அத்துறை சார் உயர் ;கல்வி வழங்குவதால் பொருளாதார அபிவிருத்தியினை பேண முடிகின்றது. மேலும் சிறந்த கல்வி அறிவுள்ள சமூகமே நல்ல பழக்கவழக்கங்களையும்ää தன்னம்பிக்கையையும்ääதொடர்பாடல் திறனையும் கொண்டிருக்கும் எனவே எதிர்கால சந்ததியினரும் அத்தகையதொரு வழியில் பயணிப்பதற்கு உயர் கல்வி சிறப்பானதாக காணப்படுகின்றது.சுய ஆளுமைகளை வளர்த்துக்கொள்ளவும் சமூகத்தினதும் நாட்டினதும் சிறந்த பிரஜையாக திகழ்வதற்கும் உயர் கல்வி இன்றியமையாததாகும்.

உலகிலேயே United States ,Switzerland, Canada , Denmark , Finland , Netherlands,Australia, , Singapore, United Kingdom  ஆகிய நாடுகளே உயர் கல்விக்கான வாய்ப்புக்களை வழங்கும் முதல் தர 10 நாடுகளாகும்.உயர் கல்விக்கான அதிக இடத்தை அளிக்கும் இந்நாடுகளின் பொருளாதார சமூக அபிவிருத்தி பட்டியலை எடுத்து நோக்கும் போது அந்நாடுகளின் பொருளாதார சமூக அபிவிருத்தியானது ஏனைய நாடுகளை விட உச்சத்தில் இருப்பதனை நாம் காணக்கூடியதாகவுள்ளது.
2010 ஆம் ஆண்டளவில் 178 மில்லியனாக காணப்பட்ட உயர் கல்வி வளர்ச்சியானது 2025ஆம் ஆண்டளவில் 262 மில்லியனாக உயரும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதில் குறிப்பிடக்கூடிய மிக முக்கிய விடயம் என்னவென்றால் உயர் கல்விக்கான வாய்ப்புக்களை வழங்கும் பல்கலைக்கழகங்களில் அதிகளவானவை தனியார் துறையினை சார்ந்ததாகவே காணப்படுகின்றன.


உயர் கல்வியின் ஆதீக்கத்தினை ஆராயும் போது உலகளாவிய ரீதியில் 62% சதவீதத்தினர் பல்கலைக்கழக அனுமதியினை பெற்றுள்ளனர்.மேலும் 17% சதவீத்தினர் பல்கலைக்கழக அனுமதியை தவிர்ந்து தொழிற்துறை பயிற்சி கல்வியை மேற்கொள்கின்றனர்.பல்கலைகழகத்திற்கு உள்வாங்கப்பட்டோரில் ஆண்களை விட பெண்கள் 25% வீதத்தில் உயர்வடைந்திருக்கின்றனர்.ஆசிய நாடுகளை சேர்ந்த மாணவர்களில் 52% சதவீதமான மாணவர்கள் தங்களின் உயர் கல்வியினை வெளிநாடுகளில் கற்றோராக காணப்படுகின்றனர். இத்தகைய தரவுகளானது சமூக வளர்ச்சியில் உயர் கல்வியின் பங்கு அதிகரித்து வருவதனை எடுத்துக்காட்டுகின்றது.சிறந்த உயர் கல்வி பெற்ற சமூகம்  பொருளாதார ரீதியில் மட்டுமல்லாத உளவியல் ரீதியிலும் சிறந்து காணப்படும்.

- ஸ்ரீயா

கருத்துகள்