சிறந்த ஒழுங்கமைப்பு.... அழகிய வடிவமைப்பு... EVENT MANAGEMENT

 

      எமது வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் மறக்க முடியாத பல நினைவுகளை எம்முள் பதிக்கின்றது.அவற்றில் முக்கியமானது திருமணம் ,பிறந்த நாள் விழாக்கள்,திருமண ஆண்டு விழா, பூப்படைதல்விழா என்பனவாகும்.இந்நிகழ்வுகள் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்கமுடியாத நினைவலைகளையும் தருணங்களையும் பதித்துச்செல்கின்றது.அத்தோடு தொழில்சார் அல்லது தொழில்சார் பல நிகழ்வுகள் நடத்தப்படுவதனையும் அதற்கான அலங்காரங்களும் ஏனைய விடயங்களும் ஒழுங்குச்செய்யப்படுவதனையும் காணமுடியும்.ஒவ்வொரு விழாக்களையும் இவ்விழாக்களை மிகுந்த சந்தோஷத்துடனும் அழகுடனும் வெகு சிறப்பாகவும் நடத்த வேண்டியது அவசியமாகும். விழாவினை நடத்தும் நாம் மட்டுமல்லாது விழாவிற்கு வருகைத்தருவோரும் அவ்விழாவின் பிரம்மாண்டத்தையும் அழகினையும் சிறப்பினையுமு; என்றென்றும் பேசும் படியாக அந்நிகழ்வு அமைதலானது கூடுதல் சிறப்பினை தரும்.

Event Management என்றால் என்ன என்பது சிலருக்கு இன்னும் சரியாக புரியாத ஒரு விடயமாக காணப்படுகின்றது.ஒரு நிகழ்வினை முழுமையாக ஒழுங்கமைப்பதனையே Event Management  என குறிப்பிடுவர்.இவ் Event Management இணை நடத்துபவர்கள் அந்நிழ்விற்கு தேவையான அலங்காரங்கள், உணவு, விருந்தினர் உபசரிப்பு,நிகழ்வு முகாமைத்துவம் என ஒர் நிகழ்விற்கு தேவையான அனைத்து விடயங்களையும்  முழுமையாக செய்துக்கொடுதலினையே Event Management எனக்குறிப்பிடுவர்.நிகழ்வு தொடர்பான அனைத்து ஒழுங்கமைப்பகளையும Event Management  இனால் செய்துக்கொடுக்கப்படுவதால் நிகழ்வினை நடத்துபவர்களுக்கு எந்தவொரு சிரமும் இல்லை அத்தோடு நிகழ்வன்று எவ்வித பதற்றமும் இல்லாமல் உற்றார் உறவினர் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கவும் முடியும்.Event Management இல் பின்வரும் விடயங்கள்
உள்டங்குகின்றது,

மணவரை அலங்காரம்


திருமணம் அல்லது வேறு எந்தவொரு நிகழ்விலும் மேடை அமைக்கப்பட்டிருக்கும்.திருமண விழாவாயின் மேடையின் மேல் மணவரை அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும்.இன்றைய காலங்களில் மணவரை அலங்காரங்களை இயற்கை பூக்களை கொண்டு அழகுப்படுத்துகின்றனர்.மேலும் சில மணவரைகள் வெவ்வேறு வடிவங்களில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வண்ணமயமாக காட்சித்தருகின்றன.நவீன விதங்களில் மணவரைகள் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வந்தாலும் இன்றும் பாரம்பரிய கலாசாரத்தை வெளிப்படுத்தும் வடிவமைப்புகளை உடைய மணவரைகளையும் மக்கள் விரும்புகின்றனர்.மணவரைகளில் கோபுர வடிவமைப்புடைய மணவரை , அரை வட்ட வடிவ மணவரை,சதுர வடிவ மணவரை,பந்தல் மணவரை,பூ மணவரை ,ஜங்கோணி வடிவ மணவரை எனும் பல வகைகள் உண்டு.தனியாக மணவரையினை மட்டும் வைக்காமல் அருகில் அலங்கார தூண்கள் ,சிலைகள் அல்லது வேறு ஏதேனும் அலங்கார விடயங்கள் என்பனவற்றையும் இணைத்து வைக்கும் போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சியளிக்கின்றன.

மேடை அலங்காரம்

ஒவ்வொரு விழாவினதும் மேடையானது மிக விசேடமாக அலங்கரிக்கப்பட்டிருத்தல் அவசியம். விழாவின் மேடையில் மணவரை அலங்காரம் எவ்வளவு முக்கியமானதோ அதே போல் மேடையின் ஏனைய பகுதிகளுக்கான அலங்காரமும் மிக அவசியமே.திருமணம் அல்லாத ஏனைய நிகழ்வுகளில் மணவரைகள்  தேவையற்றதாகும்.அத்தகைய நிகழ்வுகளுக்கு மேடை அலங்காரங்கள் மிக முக்கியமானதாகும்.மேடை அலங்காரங்களுக்கு இயற்கை மற்றும் செயற்கை பூக்கள் மற்றும் வண்ணமயமான துணிகள் அல்லது வடிவ உருக்கள் அத்தோடு வடிவமைக்கப்பட்ட சுவர்கள் என்பன தற்பொழுது அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இயற்கை பூக்களின் அலங்காரங்களை மக்கள் அதிகமாக விரும்புவதனை காணமுடியும்.
சில விழாக்களில் மேடை ஓரங்களில் அழகிய அலங்காரங்களை செய்திருப்பர் அவை பார்ப்பதற்கு கவர்ச்சிகரமானதாக காணப்படும்.மேடையினை அலங்காரப்படுத்தும் போது மேடையில் இடப்படும் மேசைகளை ஒரே நேராக அமைக்காது சிறிது வித்தியாசமான கோணங்களில் அமைத்தலானது அம்மேடைக்கு அழகினைத்தரும்.மேலும் மேடைப்பகுதி அமைந்துள்ள சுவரின் பகுதிகளில் சுவரோடு இணைந்ததான மெல்லிய வடிவமைப்புகளை செதுக்குவதானது இந்நவீன கால வடிவமைப்புகளின் ஒரு வகையாக கருதப்படுகின்றது.மேடையின் இரு மூளைகளிலும் சிறிய வகையிலான இயற்கை தாரவத்தையுடைய பூச்சாடியை வைக்கலாம் அல்லது அழகிய கருபொருளை வெளிப்படுத்தம் சிற்பங்கள் அல்லது தூண்களை அமைக்கலாம்.மேடை சுவர்களை வண்ண துணிகள்; அல்லது நிற ரிப்பனை கொண்டு வரிவடிவ அல்லது திட்டுக்கள் போன்றும் அமைக்கலாம்.

மண்டப அலங்காரம்
Add caption


ஓர் விழாவில் மேடைக்கு அடுத்தப்படியாக மண்டப அலங்காரமே காணப்படுகின்றது.மண்டபத்தினை பல விதங்களில் அலங்காரம் செய்ய முடியும்.மண்டபத்தின் மூளைப்பகுதிகளில் விழாவிற்கு பொருத்தமான உருவங்கள் அல்லது இயற்கை பூச்சாடிகளை வைக்க முடியும்.மண்டப சுவர்களில் ஓவியங்கள் அல்லது வடிவமைப்பு சார்ந்த அலங்காரங்களை மேற்கொள்ளலாம் அல்லது வண்ண விளக்குகளை கொண்டு மண்டப சுவர்களை அலங்காரம் செய்யலாம்.மேலும் மண்டபத்தின் தரைகளில் விரிக்கப்படும் தரை விரிப்புகளானது இன்றைய காலங்களில் நிகழ்வுக்கு சிறந்த பரிமாணத்தை கொடுக்கின்றது.ஆகையால் மண்டப தரை விரிப்புகளை தேர்ந்தெடுக்கும்; போது அத்தரை விரிப்பின் வடிவமைப்பும் நிறமும் நடக்கவிருக்கும் நிகழ்விற்கு பொருத்தமானதாக இருத்தலல் மிக அவசியமாகும்.அத்தோடு இன்றைய காலங்களில் மண்டபத்திற்கு வருகைத்தருவோருக்காக அமைக்கப்பட்டிருக்கும் நாற்காளிகள் துணிகளால் அலங்காரம் செய்ப்பட்டிருப்பதனை காண முடியும்.இதுவும் பார்ப்பதற்கு அழகாகவே காணப்படுகின்றது.

வரவேற்பிட அலங்காரம்

வரவேற்பிட அலங்காரமானது மிக முக்கியமானதாகும்.ஓர் நிகழ்விற்கு வருகைத்தருவோர் முதலில் வரவேற்பிடத்தினை கடந்தே உள்நுளைவர் ஆகையால் அவர்கள் வருகைத்தரும் போது வரவேற்பிடமானது பார்ப்பதற்கு அழகாகவும் வித்தியாசமாகவும் அலங்கரிக்கப்பட்டிருக்குமாயின் புத்துணர்வுடனும் புதுமகிழ்ச்சியுடனும் அவர்கள் நிகழ்வில் ;பங்குகொள்வர்.வரவேற்பிட அலங்காரங்களில் தோரணங்கள் கட்டாயமாக காணப்படும். இயற்கை பூக்களை கொண்டு மாலையாகவும் தோரணத்தினை அமைக்கலாம் அல்லது மாவிலையினை கொண்டு மண்டப வாசலுக்கான தோரணத்தினை அமைக்கலாம்.இந்து திருமணங்கள் அல்லது விழாக்களில் வாழை மரம் கட்டுவது வழமையாகும்.மேலும் கும்பம் கோலம் போடுவதும் வரவேற்பிற்கு சிறப்புத்தரும். கோலத்தினை பல வண்ண டிசைன்களில் வண்ணங்களை கொண்டு அமைப்பதானது நிகழ்விற்கு மேலும் சிறப்பினை தரும்.

விருந்துபசாரம்

ஒவ்வொரு நிகழ்விற்கும் உணவானது மிக முக்கிய இடத்தினை பெறுகின்றது.உணவு சிறப்பாக இருக்கும் போது அந்நிகழ்வு முழுமையடைகின்றது. ஓவ்வொரு மதத்தவரின் திருமணத்திலும் ஒவ்வொரு விதமான அவர்களின் வழக்கத்திற்கேற்ற உணவுவகைகளே விரும்புவர்.அதற்கேற்ப அமைக்க வேண்டியது அத்தியாவசியமாகும் மேலும் திருமணத்திற்கு தனியான உணவு வகைகளும திருமண வரவேற்புக்கு வேறு வகையான உணவினையுமே நிகழ்வினை நடத்துவோர் விரும்புவர் அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஒழுங்குசெய்தல் வேண்டும்.மேலும் திருமணமல்லாத வேறு நிகழ்வுகளுக்கான உணவுகள் அந்நிகழ்வினையும் அந்நிகழ்வினை நடத்துபவரின் விருப்பத்திற்கிணங்கவும் காணப்படுதல் வேண்டும்.மேலும் வரவேற்பு பாணம் மற்றும் ஏனைய பாண வகைகளும் விருந்துபசாரத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

மணப்பெண் , மணமகன் அலங்காரம்

   திருமணங்களில் மணப்பெண் அல்லது மணமகன் அலங்காரங்களையும் இவ் நுஎநவெ ஆயயெபநஅநவெ நடாத்துவோரே ஒழுங்குசெய்து தருகின்றனர்.மணப்பெண்னிற்கான விசேட சாரிகளை தெரிவு செய்வதோடு மணப்பெண்னின் சாரியின் நிறத்திற்கேற்ப மணமகனின் ஆடையின் நிறத்தினையும் தெரிவு செய்வதோடு அநிகழ்வின் முழுமையான அலங்காரங்கள் மணமகளின் சாரியின் நிறத்திற்கேற்பவே அமைக்கும் போது அந்நிகழ்வானது மிகுந்த அழகினை ஏற்படுத்துகின்றது. மேலும் ;வுhநஅ ஊழடழரச ற்கேற்ப நிகழ்வினை ஒழுங்கமைக்கும்; போது அந்நிகழ்வானது மிகுந்த நேர்த்தியாகவும் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வாகவும் காணப்படுவதால் திருமண ஆல்பங்கள் மற்றும் வீடியோவிற்கு அந்நிகழ்வின் அழகு அதிசிறந்ததாக காணப்படுகின்றது.

புகைப்பட ஆல்பம் மற்றும் வீடியோ

ஒவ்வொரு நிகழ்விலும் அந்நிகழ்வினை மீளவும் ஞாபகப்படுத்திக்கொள்ளும் பொருட்டு புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது வழமை. நுஎநவெ ஆயயெபநஅநவெ இல் இதனையும் ஒழுங்கு செய்து தருவர்.நிகழ்வு தொடர்பான அனைத்து தருணங்களையும் புகைப்படம் அல்லது  வீடியோ எடுத்து அந்நினைவுகளை பதிவு செய்துக்கொள்ளுவதன் மூலம் எதிர்காலத்தில் அந்நினைவலைகளை மீட்டிப்பார்ப்பதற்கு சிறந்ததாக காணப்படும். நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வீடியோவினையும் நன்றாக வடிவமைத்து தரும் பொருப்பும்; நுஎநவெ ஆயயெபநஅநவெ இனை சார்ந்ததாகும்.

இவ்வாறாக ஓர் நிகழ்வினை முழுமையாக ஒழுங்கமைப்பதனையே  Event Management  எனக்குறிப்பிடுவர். இவ் Event Management  ஒழுங்கமைப்பினால் பல நன்மைகள் உண்டு.
01.நிகழ்வினை நடத்துபவருக்கு நேரம் விரயம் ஏற்படாது
02.அதிகளவான பணவிரயம் ஏற்படாது
03.எந்தவிக பதற்றமுமில்லாமல் நிகழ்வு நடத்தப்படும்
04.ஆக்கபூர்வமான படைப்புகள் மற்றும் வடிவமைப்புகள் நிகழ்வினை அலங்கரித்திருக்கும்
05.மிக அழகான அலங்காரங்களுடான நிகழ்வு பார்ப்போரை வியக்க வைக்கும்
06.வாடிக்கையாளர் திருப்பதி மேம்படும்
07.திட்டமிடப்பட்ட விதத்தில் நிகழ்வு நடத்தப்படும்
08.நிகழ்வுக்கு பின்னரான வேலைப்பளு குறைவடையும்
09.நிறுவன நிகழ்வுகளாயின் சிறந்த நிகழ்வு வர்த்தக அனுகூலங்களை அதிகரிக்ககூடியது
10.நிழ்விற்கு வருகைத்தருவோருக்கு சிறந்தனவற்றை அளிக்க முடியும்.

போன்றனவாகும்.உங்கள் நிகழ்வுகளையும் சிறந்த மற்றும் அழகிய அலங்காரங்களுடன் கூடிய நிகழ்வுகளாக்க இன்றே Event Management  இனை நாடி நிகழ்வினை அழகாக்கிடுங்கள்.
- ஸ்ரீயா





கருத்துகள்