https://www.facebook.com/Eyecreation.lk
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனித வாழ்வினை அடியோடு மாற்றிவிட்டது. மனிதனின் நாளாந்த கடமைகளையும் இலகுப்படுத்துவதோடு நேரத்தினையும் சேமிப்பதில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதிக பங்கு உண்டு.அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியின் ஓர் அங்கமே இணையம். இவ்விணையத்தில் மக்களின் விருப்புக்குரிய பலவிடயங்கள் உண்டு அவற்றில் ஒன்றுதான் “ஒன்லைன் ஷொப்பிங்” .
இவ் ஒன்லைன் ஷொப்பிங் மூலம் கடை வீதிகளில் அலைந்து திரிந்து பொருட்களை கொள்வனவு செய்வதனை விடுத்து இருந்த இடத்தில் இருந்தே ஒன்லைன் மூலமாக பொருட்களை வீட்டிலேயே பெற்றுக்கொள்கின்றனர்.இதனையே ஒன்லைன் ஷொப்பிங் என்கின்றோம்.விற்பனர்கள் தாங்கள் விற்கும் பொருட்களை காட்சிசெய்துää மென்பொருளைப் பயன்படுத்தி வாடிக்கையாளரின் கொள்முதல் விபரங்களை ஒழுங்கு செய்யும். இறுதியாக பண அட்டையைப் பயன்படுத்தி பணம் செலுத்த வேண்டும். பொருட்கள் வீட்டுகளுக்கு அனுப்பப்படும்.
இவ் ஒன்லைன் ஷொப்பின் பின்வரும் விதங்களில் எமக்கு நன்மை பயக்கின்றது.
1. நேர சேமிப்பு
இன்றைய காலங்களில் எல்லாவற்றையும் விட அதிக மதிப்பு வாய்ந்த விடயமாக நேரம் காணப்படுகின்றது.நேரத்தை சேமிப்பது இலகுவாக விடயமல்ல அத்தகைய நேரத்தை வீணாக கடைவீதிகளுக்கு சென்று பொருட்களை தேடி அலைந்து வாங்கி முழு நாளினையும் பொருட்கொள்வனவிற்காக செலவிடுவதனை விட வீட்டில் இருந்தப்படியே சிறிதளவான நேரத்தையினை மட்டுமே செலவிட்டு ஒன்லைன் மூலமாக பொருட்களை கொள்வனவு செய்வதன் மூலம் நேர விரயம் தடுக்கப்படுவதால் இந்நேரத்தினை வேறு விடயங்களுக்கு பயன்படுத்தக் கூடியதாக காணப்படுகின்றது.
2.வேவ்வேறுபட்ட பொருட்களை தேர்வு செய்வது இலகு
கடைகளுக்கு சென்று எமது விருப்பம் போல் வௌ;வேறுபட்ட பெருட்களை தேர்வு செய்வது மிக கடினம் ஆனால் ஒன்லைன் ஷொப்பிங் மூலமாக வௌ;வவேறு நிறங்களில் வடிவங்களிலான பொருட்களை இலகுவாக தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.
3.விலை ஒப்பீடுகளை மேற்கொள்வது இலகு
கடைகளுக்கு நேரடியாக சென்று பொருட்களை கொள்வனவு செய்யும் போது சில நேரங்களில் நாம் கொள்வனவு செய்யும் பொருளின் விலை வேறு கடைகளில் குறைவாக காணப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.ஆனால் ஒன்லைன் ஷொப்பிங் செய்யும் போது வேறு வேறு தளங்களில் அவ்வுடைக்கு குறிப்பிட்டுள்ள விலைகளுடன் ஒப்பிட்டு மிக விரைவாக விலை குறைவான பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
4.எந்நேரமும் ஷொப்பிங் செய்யலாம்
அதிக வேளைப்பளு காரணமாகவோ அல்லது வேறேதும் காரணங்களுக்காகவோ குறிப்பிடட்ட நேரத்தில் பொருட்கொள்வனவை மேற்கொள்ள முடியாவிட்டால் சிரமங்களை எதிர்நோக்க வேண்டிவரும்.ஆனால் ஒன்லை ஷொப்பிங் இல் அத்தகைய சிரமங்கள் காணப்படாது.24 மணித்தியாலமும் ஷொப்பிங் செய்யக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன.
5.பணம் செலுத்த காத்திருக்க தேவையில்லை
கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்தப்பின் அதற்கான பணத்தினை செலுத்துவதற்கு அதிக நேரங்கள் காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் சில நேரங்களில் ஏற்படும். இத்தகைய அனுபவங்களை மளிகை சாமான் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.ஆனால் அத்தகைய சிரமங்கள் ஒன்லைன் ஷொப்பிங்கில் காணப்படாது.பண அட்டையினை உபயோகித்து நொடிப்பொழுதில் பணத்தினை செலுத்திவிடலாம்.
6.தனி;ப்பட்ட ரீதியானது மற்றும் பாதுகாப்பானது
இவ் ஒன்லைன் ஷொப்பிங்கானது எவருடைய தொந்தரவும் இல்லாமலும் எம்முடைய பணத்திற்கும் பாதுகாப்புடையதுமாக காணப்படும்.மேலும் விரும்பிய வகையில் ஆறுதலாக நன்றாக ஆராய்ந்து பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை இவ் ஒன்லைன் ஷொப்பிங் வழங்குகின்றது.
7.பரிசுகள் கொடுப்பதற்கு இலகுவானது
ஒருவருக்கு பரிசளிக்க நினைக்குமு; போது கடைகளுக்கு சென்று பரிசுகளை வாங்கி பின் அதனை அவரிடம் சேரிப்பிப்பதற்கு கால அவகாசம் எடுக்கும்.ஆனால் ஒன்லைன் ஷொப்பிங் மூலம் ஓர் பரிசினை தேர்வு செய்து அதனை அவருடைய வீட்டிற்கே அனுப்பி வைக்க கூடிய வசதி வாய்ப்புகளை ஒன்லைன் ஷொப்பிங் வழங்குகின்றது.மேலும் ஒரு நாட்டில் இருந்த இன்னொரு நாட்டில் உள்ளவருக்கு பரிசளிப்பதற்கும் இவ் ஒன்லைன் ஷொப்பிங் இலகுவானதாகும்.
ஓன்லைன் ஷொப்பிங் இன்று வேளைப்பளுவின் மத்தியில் சிக்கி தவிக்குமு; பலரின் பொருட்கொள்வனவை இலகுப்படுத்துவதில் முண்னனி வகிக்கின்றது.இவ் ஒன்லைன் ஷொப்பிங் மூலமாக சில தீமைகள் காணப்படினும் சரியான விதத்தில் அதனை பயன்படுத்தும் போது நன்மைப்பயக்க கூடியதாகவே காணப்படுகின்றது.
- ஸ்ரீயா
கருத்துகள்
கருத்துரையிடுக