சித்திரை புத்தாண்டு தமிழர் பண்பாட்டின்
தலைச்சிறந்த பண்டிகை


புதிய புத்தாண்டின் புது வருகை நெருங்கிக்கொண்டிருக்கின்றது.இன்னும் 5 நாட்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தை நாமும் அனுபவிப்போம்.இச்சித்திரை புத்தாண்டானது தமிழர்களின் பண்பாட்டில் தனித்துவ இடத்தினை வகிக்கின்றது.பாரம்பரிய கலாசாரத்தை வெளிப்படுத்துவதிலும் எதிர்கால சந்ததியினருக்கு எம்முடைய சமய சமூக கலாசாரத்தை கற்றுக்கொடுப்பதிலும் ஏனைய பண்டிகைகளை விடவும் சித்திரை புத்தாண்டு தனித்துவம் வாய்ந்ததாக திகழ்கின்றது.

தமிழர்களின் முறைப்படி சித்திரை மாதமானது முதலாவது மாதமாக திகழ்கின்றது.இச்சித்திரை மாதமானது ஆலங்கில நாட்காட்டியின் படி ஏப்ரல்; மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகின்றது.அத்தினமே சித்திரை புத்தாண்டு தினமாக சர்வதேச ரீதியில் தமிழர்களிடையே கொண்டாடப்படுகின்றது.

மருத்துநீர் குளியல்

சித்திரை புத்தாண்டின் ஆரம்பமானது எண்ணெய் குளியலோடு ஆரம்பிக்கின்றது.அதிகாலை எழுந்து  மருத்து நீர் வைத்து குளித்து புத்தாடை அணியவேண்டும.; போது இத்துணை காலம் நாம் செய்த பாவங்களை நீக்கி புத்துணர்வுடனும் புதுப்பொலிவுடனும் புத்தாண்டினை ஆரம்பிக்க வேண்டியதே இதன் நோக்கமாகும்.

புத்தாடை அணிதல்



பண்டிகைக்காலம் என்றாலே முதலில் மக்கள் கொள்வனவு செய்வது புத்தாடைகளை தான்.சித்திரை புத்தாண்டிலும் புத்தாடைகளுக்கென்று தனியிடம் உண்டு.மேலும் இன்றைய மக்கள் தங்களின் பாரம்பரிய கலாசார ஆடைகளை அணிவது மிகவும் குறைவு ஏனென்றால் நாளாந்த வாழ்க்கைக்கு பார்ம்பரிய ஆடைகளை அணிந்துக்கொண்டு பணிகள் புரிவதென்பது இக்கால நடைமுறைக்கு பொருந்துவதில்லை.ஆகையால் இவ்வாறான பண்டிகை காலங்களிலேனும் எமது பாரம்பரிய கலாசாரத்திற்கு மதிப்பளித்து கலாசார ஆடைகளை அணியவேண்டியது அவசியமாகும்.

வாசலில் கோலமிடுதல்

சித்திரை புத்தாண்டின் காலைப்பொழுதில் ; பெண்கள் தங்களின் வீடுகளை சுத்தம் செய்து வாசலில் மிக அழகான கோலத்தையும் இடுவர்.கோலம் என்பது அழகியல் சார்ந்த விடயமாகும்.தற்காலத்தில் ;கோலங்கள் அழகுக்காகவும்ää மரபுகளைப் பேணுவதற்காகவுமே வரையப்பட்டு வந்தாலும்ää முற்பட்ட காலத்தில் கோலம் இடுவதில் பல்வேறு நம்பிக்கைகளும்ää சமயää பண்பாட்டு முக்கியத்துவங்களும் இருந்தன. பொதுவாக வாசலில் வரையப்படும் நிறக்கோலங்கள் வீட்டுக்கு வருபவர்களை வரவேற்பதற்கான அடையாளமாகவும்ää வீட்டில் வசிப்பவர்களுக்கு அதிட்டத்தைக் கொண்டுவரும் ஒன்றாகவும் கருதப்படுகின்றது.; செல்வத்துக்கு அதிபதியாக இந்து மக்கள் நம்பும் "இலட்சுமி"யை வரவேற்பதற்காக வாசலில் "நிறக்கோலம்" இடுவர். இந்நிறக்கோலத்தை இலட்சுமியின் பாதங்களின் வடிவில் வரைவதும் உண்டு.
கோலங்களில் பல வகையுண்டு அவையாவன

கம்பிக் கோலம்
புள்ளிக் கோலம்

என்பனவாகும்.கம்பிக்கோலம் என்றால் கோடுகளில் எளிமையான வித்தில் வடிவங்களின் மூலமான கோலத்தை இடுதலாகும்.புள்ளிக் கோலம் என்றால் கோடுகளை வரையும் முன்ää வழிகாட்டல் புள்ளிகளை இட்டுக்கொண்டு அதன் அடிப்படையில் வடிவங்களை வரைவதாகும்.

கோலங்களானவை அரசி மாவுääமுருங்கைப்பொடி ஆகியவை கொண்டு வரையப்படுகின்றது. தரையாயின்ää நீர் தெளித்துப் கழுவிய. பின்னர் பெருவிரலுக்கும்ää ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிதளவு கேல மாவினை எடுத்துää விரல்கள் நிலத்தில் படாமல்ää நிலத்துக்கு அரையங்குல உயரத்திலிருந்துää  கோலமாவினை தூவிச் செல்வார்கள். பசுச் சாணம் முதலியவற்றால் மெழுகப்பட்ட மண் தரையிலோ அல்லது வேறு இறுக்கமான தரையிலோ கோலம் வரைவர்.சிலர் வண்ணக்கோலங்களையும் வரைவர்.

கோயிலுக்கு செல்லல்

புத்தாண்டன்று புத்தாடை அணிந்து தமிழர்கள் கோவிலிக்கு சென்று கடவுள் வழிபாடுகளில் ஈடுபடுவதனை வழக்கமாக கொண்டுள்ளனர்.புத்தாண்டன்று இறைவனின் அருளினை பெற்றுக்கொண்டால் அவ்வருடம் முழவதும் நன்மைகள் விளையும் என்பது அனைவரினதும் நம்பிக்கையாகும்.தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்களும் விகாரைகளுக்கு சென்று இறை வழிபாட்டினை மேற்கொள்வர்.இறைவக்கு பூஜை செய்து மலர்மாலை அணிவித்து இறைவனின் ஆசியுடன் புத்தாண்டை ஆரம்பிப்பர்.

 பொங்கல் சமைத்தல்

பாரம்பரிய முறைகளை பின்பற்றி இன்றும் சில வீடுகளில் சித்திரை புதவருட பொங்கல் சோற்றினை வெளியில் அடுப்பிட்டு அவ்வடுப்பில் மாவிலை கட்டப்பட்ட மங்கள பானையினை வைத்து பொங்கல் சமைப்பர்.சிலர் வெண் பொங்கள் மற்றும் சக்கரை பொங்களினை சமைப்பதும் உண்டு.புத்தாண்டன்று வீட்டில் பூஜை வழிபாடுகள் முடிவுற்றப்பின் அனைவரும் ஒன்றாக இணைந்து உணவு உண்பர்.

திண்பண்டங்கள்

புத்தாண்டு கொண்டாட்டங்களில் சிறப்பிடம் பெறும் மற்றொரு விடயம் பணியாரம் ääகொண்டை பணியாரம் ää பாசிப்பயறு பணியாரம் ääகொக்கிசு ääஅல்வா ääலட்டுää முறுக்குää கேசரி போன்ற திண்பண்டங்கள் செய்யப்படும்.குழந்தைகளின் விருப்புக்குரிய விடயம் திண்பண்டங்களை சுவைப்பதாகும்.

இத்திண்பன்டங்கள் அனைத்திலும் தானியங்களும் புரதம் மாபொருட்கள் ;மற்றும் இயற்கை உணவு பொருட்கள் அடங்கிய விதத்திலேயே செய்யப்படுகின்றன.ஆகவே உடலுக்கு அனைத்து விதமான உணவுபொருட்களும் இத்திண்பண்டங்கள் வாயிலாக உட்கொள்ளப்படுவதால் உடலுக்கும் நன்மைகள் பல ஏற்படுகின்றன.

கைவிசேடம்


புதுவருடத்தன்று வீட்டின் குடம்ப தலைவர்கள் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்களிடமிருந்து  வீட்எல் உள்ள ஏனையோர் வெற்றிலையில் ;பணத்தினை வைத்து கைவிசேடமாக பெற்றுக்கொள்வர்.இதில் முக்கியமாக சிறுவர்கள் கைவசேடத்தினை பெற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவர்.


கேளிக்கை விளையாட்டுக்கள் மற்றும் நிகழ்வுகள்


சித்திரை புத்தாண்டின் மற்றொரு சிறப்பம்சம் கேளிக்கை விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகள் என்பனவாகும்.சித்திரை புத்தாண்டன்று வலுக்கு மரம் ஏறுதல்ääகண்கட்டி முட்டி உடைத்தல்
ääகயிறு இழுத்தல்ääயாணைக்கு கண் வைத்தல்ää ஓட்டப் பந்தயம்ääமிதி வண்டி ஓட்டப்போட்டி போன்ற விளையாட்டுகள் நடைபெறுவதும் அதில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும் ஒற்றுமையுடனும் கலந்துக்கொள்வர்.

மேலும் நடனம் நாடகம் போன்ற நிகழ்வுகளும் சித்திரை புத்தாண்டன்று மேடையேற்றப்படுவது வழமையாகும்.இத்தகைய விளையாட்டுகுளும் நிகழ்வுகளும் மக்களிடையே ஒற்றுமையினை ஏற்படுத்துவதோடு தலைமைத்துவ பண்பையும் குழவாக ஒண்றினைந்து செயற்படும் பண்பினையும் இவை வளர்க்கின்றன.மேலும் வருடம் முழவதிலும் கடின உழைப்பினை சிந்தி வேலை செய்வோருக்கும் இந்நாள் ஓய்வினை தருவதாகவும் காணப்படுகின்றது.

இத்தகைய விதத்தில் பாரம்பரிய கலாசாரத்தினை வெளிப்படும் பண்டிகையாக காணப்படும் சித்திரை புத்தாண்டன்று உறவுகள் ஒண்றினைந்து இன்புற்றிருக்கவும்ääஒற்றுமையினை மேம்படுத்தவும் சந்தோஷத்தினை அதிகப்படுத்தவும் தங்களின் உணர்வுகளை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துக்கொள்ளவும் இச்சித்திரை புத்தாண்டு வாய்ப்பளிக்கின்றது.

                                                                        ஸ்ரீயா





கருத்துகள்

கருத்துரையிடுக