உலக வானொலிதினம்
வானொலி தினம்.வானொலி மூலமான ஒலிபரப்பு, வானொலி ஒலிபரப்பாளர்கள் மத்தியில் சர்வதேச மட்டத்திலான ஒத்துழைப்பை மேம்படுத்தல், சமூக வானொலிகள் உட்பட வானொலி மூலமாக தகவல்களை பெறுவதற்கான வசதிகளை உருவாக்குவதற்கும் பெறுவதற்கும் ஈடுபாட்டாளர்களை ஊக்குவித்தல் போன்றவற்றை முன்னெடுப்பதற்கான தினமாக பெப்ரவரி 13 ஆம் திகதியை யுனெஸ்கோ அமைப்பு பிரகடனம் செய்துள்ளது. பரந்தளவினரை சென்று அடைவதற்குரிய ஊடகமாக விளங்குவதுடன் இன்றைய காலத்தில் புதிய தொழில்நுட்ப வடிவங்களையும் பெற்று விளங்கும் வானொலியின் ஒப்பற்ற பெறுமதியின் மீது கவனத்தை ஈர்க்கும் சந்தர்ப்பமாகவும் இத்தினம் விளங்குகிறது.
இத்தினத்தை கொண்டாடுவதற்கு யுனெஸ்கோ அனைத்து நாடுகளையும் ஊக்குவிக்கின்றது. தேசிய, சர்வதேச ஒலிபரப்பு நிலையங்கள், அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடக அமைப்புக்கள், பொதுமக்கள் போன்ற அனைத்து தரப்பினரையும் இக்கொண்டாட்டங்களில் இணைத்துக் கொள்ளுமாறு யுனெஸ்கோ கேட்டுக் கொள்கிறது. இவற்றிற்கு அவசியமான வளங்கள் இலவசமாக கிடைப்பதற்கு ஏற்பாடுக்கள் செய்யப்படுகின்றன.
மனிதாபிமான உதவிக்கென வானொலி
“ஒரு பெட்டியில் வானொலி” என்பது இடத்திற்கு இடம் எடுத்துச் செல்லப்படக்கூடிய ஒன்றிணைக்கப்பட்ட ஒலிபரப்பு நிலையமாகும். ஆனர்த்த சூழ்நிலைகள், அவசரகால சூழ்நிலைகள், பொது அறிவித்தல்களை வெளியிடும் சூழ்நிலைகளில் இதனை பயன்படுத்தலாம். இதனை யுனெஸ்கோ அனுசரனையுடன் ஆசிய ஸ்ரீ பசுபிக் ஒலிபரப்பு யூனியன் வடிவமைத்துள்ளது. டீஜிற்றல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்துள்ள இத்தொகுதி அனர்த்த, அவசர, சமூக அறிவித்தல் சூழ்நிலைகளில் தொழில்களை மேற்கொள்ளும் ஒலிபரப்பாளர்களின் நீண்டகால தேவையாகும். ஒரு அனர்த்தம் ஏற்பட்டு அதனால் ஒலிபரப்புக்கட்டமைப்பு செயலிழக்கும் படியாகிவிட்டால் இதனால் இயக்குவிக்கப்பட முடிகிறது. ஒரு பெட்டியின் அமைந்துள்ள இந்த வானொலித் தொகுதி நிவாரண நடவடிக்கைகள், வாந்திகளை முறியடித்தல், அனர்த்தத்திற்கு பின்னைய துயர்நிலையை போக்குதல், அனுபவங்களை பகிர்தல் போன்ற நடவடிக்கைகளின் போது பயன்படுத்தத்தக்கது. முகாம்களில் வாழ்பவர்களுக்கு இது அற்புதமான சேவைகளை ஆற்றுகிறது. இந்தோனேசியாவில் சுனாமிக்கு பின்னைய ஏற்பாடுகளின் போது சூரியசக்தியினால் இயங்கும் ஃ கையினால் இயக்கப்படும் வானொலி பெட்டிகள் வழங்கப்பட்டன. உணவு, நீர் என்பவற்றுடன் இவையும் வழங்கப்பட்டதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவியல் ரீதியான அறுதல் கிடைத்தது. ஹேயிட்டியிலும் அனர்த்தத்தின் பின்னர் பெட்டியில் அமைந்துள்ள வானொலி பெட்டிகள் வழங்கப்பட்டன.
“பெட்டி” 55ஒ50 செ.மீ அளவு கொண்டது. இதனுள் ஒரு படிக்கணினி, மிக்சர், டீ.வீஃடீ பிளேயர், 30 வற் வலுவுள்ள எம்.எம்.ஒலியனுப்பி என்பன அடங்குகின்றன. வானொலி நிகழ்ச்சிகளை தயாரிப்பதற்கு இது உதவும். முன்னரே பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சியை அல்லது ஒரு டிஜிற்றல் ஒலிப்பதிவு கருவியையும் ஒலிவாங்கியையும் பயன்படுத்தி ஒலிபரப்புச் செய்தல் சாத்தியமானது.
யுனெஸ்கோவின் ஆதரவில் பெட்டியில் அமைந்த வானொலி தொகுதியானது எட்டு நாடுகளில் (பங்காளதேஷ், பூட்டான், இந்தியா, ஜமேக்கா, பிலிப்பைஸ், சூடான், சமோ, டொங்கா, தன்சானியா, வனுவட்டு பயன்படுத்தப்படுவதுடன் தகவல்களை பலர் அறியச்செய்வது, அனர்த்த சூழ்நிலைகளில் மக்களை தற்பாதுகாப்புத் தயார்நிலைக்கான எச்சரிக்கைகள் விடுப்பது போன்றவற்றில் பெரிதும் வரவேற்கப்படுகிறது.
வானொலி தொடர்பான முக்கிய திகதிகள்.
1857 பெப்ரவரி 22 – ஜேர்மணியை சேர்ந்த இயற்பியல் ஆய்வாளர் ஹீன்ரிச் ரூடோல்ப் ஹேர்ட்ஸ் பிறப்பு. மக்ஸ்வெல் என்பவரால் முன்வைக்கப்பட்ட ஒளி தொடர்பான மின்காந்தவியல் அறிமுறையை மேலும் விரிவு படுத்தினர். வானொலி அலைகளை கண்டுபிடிக்கவும், உற்பத்திசெய்யவும் உதவும் உபகரணம் ஒன்றை தயாரித்து மின்காந்த அலைகளின் இருப்பை முதன் முறையாக திருப்திகரமான முறையில் செய்து காட்டியவர் இவரே. இக்கண்டு பிடிப்பு வானொலியையும் கம்பியில்லா தந்திமுறையையும் அறிமுகம் செய்வதில் அடிப்படையாக அமைந்தது.
1858 நவமபர் 30 – கம்பியில்லா ஒலிபரப்பு முறையின் முன்னோடியான ஜகதீஸ் சந்திரபோஸ் பிறப்பு. ஒரு இயற்பியல் ஆய்வாளரும் உயிரியல் அறிஞரும், விஞ்ஞான புனைக்கதைகளின் முன்னோடி எழுத்தாளருமான இவர் ஒரு இந்தியர் ஆவார்.
1895 மே 07 - ரஷ்ய கண்டுபிடிப்பாளர் அலெக்சான்டர் பொப்போவ் வானொலி ஒலிவாங்கி சாதனத்தை முதலில் ரஷ்ய பௌதிகவியல், இரசாயனவியல் சஙமேளனத்திலும் பல்கேரியாவிலும் நினைவுகூறப்பட்டது.
1896 மார்ச் 28 – மார்க்கோணியின் முதன்முதல் செவிப்புல ஒலியனுப்பலின் ஆண்டு நிறைவு. (கம்பியில்லா தந்தமுறையை விருத்த செய்தவர் என அறியப்படும் இவரது முதன்முதலான செவிப்புல ஒலியனுப்பலுக்கான சான்றுகளை எம்மால் கண்டுகொள்ள முடியவில்லை(
1896 ஜுன் 02 – மார்க்கோணி ஒரு வானொலி கருவியை ஆக்கி வழங்கினார்.
1896 ஜுலாய் 27 – மார்க்கோணி முதன்முறையாக மோர்ஸ் சங்கேத குறியீடுகளை முதன்முறையாக பகிரங்க கம்பியில்லா தந்தி ஒலியனுப்பல் மூலம் அறிமுகம் செய்தார்.
1898 பெப்ரவரி 10 – பேர்ரோல்ட் பிறெச்ற் அவர்களின் பிறந்த நாள். ஜேர்மன் கவிஞரும், நாடகஆசிரியரும்;, அரங்க நெறியாளரும், நூலாசிரியருமான இவர் ஒடு அரு தொடர்பாடல் சாதனம் ஒன்றினூடு அனுப்பப்டுமாயின் வானொலியானது இருவருக்கிடையிலான உரையாடலுக்கு வாய்ப்பளிக்கும் என எதிர்வுகூறினார்.
1906 டிசம்பர் 24 – ரெஜினோல்ட் பெசன்டன் நேரடியாக குரல், இசை மற்றும் பதிவு செய்யப்பட்ட இசை என்பவற்றை வானொலி ஒலிபரப்புச் செய்தார்.
1912 ஏப்ரல் 15 – ரைற்ரானிக் கப்பல் கடலில் மூழ்கிய தினம் வானொலி தொடர்பு சாதனம் அனேகமான பயணிகளின் உயிர்களை காப்பாற்றிய நிகழ்வை குறிக்கும் தினம்.
1912 ஓகஸ்ட் 13 – ஐக்கிய அமெரிக்காவில் ‘வானொலி தொடர்பாடல் சீhக்கல் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. வானொலி சட்டப்படியான ஒரு பாவனைப்பொருளாக ஆகியன.
1920 ஆபிரிக்காவின் கீழ் - கசாரா பகுதியில் முதன்முதலாக வானொலி ஒலிபரப்பு நடாத்தப்பட்டது.
1920 ஓகஸ்ட் 27 – ஆர்ஜன்ரீனாவின் புவனஸ் ஜரஸ் இல் அமைந்த டழள டழஉழள னந டய யணழவநய நிலையத்திலிருந்து வக்னரின் Pயசளகையட ஒலிபரப்பப்பட்டது. முதலாவது பகிரங்க ஒலிபரப்பு திகதியான ஓகஸ்ட் 27 ஆர்ஜன்ரீனாவின் உத்தியோகபூர்வ ஒலிபரப்பு திகதியாகும்.
1922 ஒக்டோபர் 18 – பீ.பீ.சி எனப்படும் உலகின் முதலாவது தேசிய ஒலிபரப்பு நிறுவனம் பிரிட்டிஷ் புறோட்காஸ்ரிங் கொம்பனி என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
1923 டிசம்பர் 18 – தென்னாபிரிக்காவின் முதலாவது வானொலி ஒலிபரப்த ஜொகன்பேர்க் நகரில் பரீட்சார்தமாக தொடக்கி வைக்கப்பட்டது.
1927 : பீ.பீ.சி செய்திகளை குடியேற்ற நாடுகளுக்கு ஒலிபரப்பு செய்யும் நோக்கில் கிழக்கு ஆபிரிக்க ஒலிபரப்புக்கூட்டுதாபனம் கென்யா நாட்டில் வானொலி ஒலிபரப்கடிபை ஆரம்பிதது. ஆங்கில மொழிமூல 1928 இல் ஆரம்பத்து. வெள்ளையினத்தவரான குடியேற்றவாசிகளை இலக்காக கொண்டு இச்சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1938 ஒக்டோபர் 30 – ழுசளழn றுநடடநள இனது வுhநறுயச ழக வாந றழசடனள வானொலி நாடகம் முதன் முதலில் ஐக்கிய அமெரிக்காவில் ஒலிபரப்பப்பட்டது.
1948 பெப்ரவரி 13 – ஐக்கிய நாடுகள் வானொலி உருவாக்கப்பட்ட ஆண்டு நிறைவு
1963 ஓகஸ்ட் 28 – உலக சிவில் உரிமைகள் இயக்கத்தின் வரையறைகளை குறிப்பதான மாட்டின் லூதர் சிங் அவர்களின் லிங்கன் ஞாபகார்த்த உரை
1980 மார்ச் 24 – சன் சல்வடோரின் அதிமேற்றிராணியர் ஒஸ்கார் ஆhநல்போ ரொமேரோ கொலையுண்ட ஆண்டுநிறைவு. ஒரு சிறந்த தொடர்பாடல் வல்லுநரான இவர் வானொலியின் ஆற்றல்களை மனிதவுரிமைகளை காப்பதன் பொருட்டு பயன்படுத்தியவர்.
இத்தினத்தை கொண்டாடுவதற்கு 15 ஆலோசனைகள்.
உலக வனொலி தினம் பற்றிய யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்தின் செய்தியை அரச.தனியார் சமூக வானொலிகள் யாவற்றிலும் ஒலிபரப்பு செய்தல். விடயம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனை வானொலி நிகழ்ச்சியாக தயாரித்தோ அல்லது மக்களுக்கான செய்தியொன்றினை தயாரித்து அதனை பல தடவைகள் பெபரவரி 13 ஆம் திகதி ஒலிபரப்புதல்.
மக்கள் வாழ்க்கையில் வானொலியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் சிறியதொரு வானொலி ஃ தொலைக்காட்சி உரையாடல் அல்லது விவாதம் ஒன்றினை ஈடுபாட்டாளர்களை (ஒலிபரப்பளர்கள், கொள்கை வகுப்பாளர்கள்,படிப்பாளிகள் , சட்டத்துறை சார்ந்தவர்கள்) மையப்படுத்தி நடாத்துல்
உங்கள் நாட்டின் வானொலி முக்கியஸ்தர்களை நேர்முகம் காண்பதுடன் அவர்களிடம் யுனெஸ்கோவின் வானொலி பற்றிய குறிப்புகளை பிரஸ்தாபித்தல்
யுனெஸ்கோ பற்றிய பிரபலமான ஒலிவடிவ கூற்றுக்களின் தொகுதியொன்றினை ஒலிபரப்புதல்
உலக வானொலி தினம் பற்றிய யுனெஸ்கோவின் பிரகடனங்களை பதிவுசெய்து லிபரப்புதல்
“சமூக ஊடகங்கள் பற்றிய நற்பயிற்சிகள்” என்னும் அண்மைக்கால யுனெஸ்கோவின் வெளியீடுகளை தரவிறக்கம் செய்து வெளிப்படுத்துதல்
யுனெஸ்கோவின் வெளிப்படையானதும் இலவசமானதுமான மென்பொருள் மூலத்திலிருந்து நிகழ்ச்சிக்கான இலவசமானதும் வெளிப்படையானதுமான விடயங்களை பெற்று வெளிப்படுத்துதல்
யுனெஸ்கோவின் திறந்த பயிற்சியரங்கமான ‘வானொலித் தயாரிப்பு பற்றிய திறந்த பயிற்சி அரங்கு’ என்பதிலிருந்து வானொலி பயிற்சிக்கூறுகளை தேர்ந்தெடுத்து வெளிப்படுத்துதல்
ஓலிபரப்பு பற்றிய யுனெஸ்கோவின் பின்வரும் விடயங்களை வெளியிட்டிருந்தது
• சமூக ஊடகம் சார்ந்த வெளியீடுகள்
• எப்படி ஆரம்பிக்கப்படுவது எப்படி தொடர்ந்து முன்னேறுவது : சமூக பல்லூடக நிலையங்களுக்கான வழிகாட்டி
• ஒலிபரப்பு தொடர்பான வெளியீடுகள்
• யுனெஸ்கோவின் தொடர்பாடல் மற்றும் தகவல் பிரிவினால் தயாரிக்கப்பட்ட அல்லது அனுசரனை வழங்கப்பட்ட வெளியீடுகள்
“சமூக ஊடகம் : நற்பயிற்சிக்கான ஒரு கiயெட” என்னும் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ளுதல்
உங்கள் நாட்டின் யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழுவில் இணைந்து இணைந்து தேசிய நிகழ்வுயைகளில் பங்கேற்றல்
யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள் பற்றி
உலக வானொலி தினமான பெப்ரவரி 13 இல் ஒரு பதாகையை வெளியிட்டு காண்பிக்குமாறு செய்திப் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்களையும் அவற்றின் ஆசிரியர்களையும் ஊக்குவித்தல்
அன்றைய தினத்தை உலக சமூக ஒலிபரப்பாளர் சங்கத்துடன் (யுஆயுசுஊ) அல்லது நாட்டிலுள்ள சமூகவானொலி சங்கங்களுடன் இணைந்து கொண்டாடுதல்.
கருத்துகள்
கருத்துரையிடுக